''இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைந்து விளையாடுவதே எனது நோக்கம்'' தனுஸ்க குணதிலக்க
“இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைந்து விளையாடுவதே எனது நோக்கம்”என தனுஸ்க குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதனை நேற்றைய தினம்(23)உள்ளுர் போட்டிகளில் கலந்து கொய்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
2022 ஆம் வருடத்தில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது அவுஸ்திரேலிய உலக கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் போது, சிட்னியில் நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கிரிக்கெட் தடை
மேலும் அவர் கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் பிணையில் சிட்னி நீதிமன்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவருக்கு கிரிக்கெட் தடையை விதித்தது.
பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யென நிரூபனமானதை தொடர்ந்து கடந்த செப்டெம்பர் மாதம் தனுஷ்கவை வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மீண்டும் கிரிக்கெட் அணியில்
இந்நிலையில் எஸ்.எஸ்.சி விளையாட்டு கழகம் அவருக்கு விதிக்கப்பட்ட உள்நாட்டு கிரிக்கெட் தடையை நீக்கியதன் மூலம் ஒரு வருடமும் 2 மாதங்களுக்கு பின்னர் தனுஸ்க குணதிலக்க நேற்றைய தினம் மீண்டும் உள்ளுர் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
நேற்று இந்த ஆண்டு கழகங்களுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
நுகேகொடை விளையாட்டுக் கழகத்துடன் எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தனுஸ்க குணதிலக்க விளையாடினார்.
அப்போதே “இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைந்து விளையாடுவதே எனது நோக்கம்” என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |