இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் : தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட தகவல்
National Peoples Party
Anura Dissanayake
Sri Lanka Presidential Election 2024
By Raghav
8 months ago
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Wijitha Herath)குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றியீட்டுவார் எனவும் அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம்
அத்துடன், தற்போதைய நாடாளுமன்றம் ஊழல் மோசடியாளர்கள் மற்றும் குற்றவாளிகளினால் நிரம்பியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புதிய நாடாளுமன்றத்தை நியமிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
