கிளிநொச்சி நீர்ப்பாசன வாய்க்காலில் மிதக்கும் சடலம் - காவல்துறை தீவிர விசாரணை(படங்கள்)
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கரடிப்போக்கு சந்தியை அண்மித்த பெரிய பரந்தன் பகுதியில் இனந்தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றில் இவ்வாறு சடலம் காணப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை

இவ்வாறு காணப்பட்ட சடலம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீதவான் பார்வையிட்ட பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்று மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.




3ம் ஆண்டு நினைவஞ்சலி