மர்மமான முறையில் உயிரிழந்த ஆணின் சடலம் மீட்பு!
நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிலாரண்டன் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது நானுஓயா கிலாரண்டன் பகுதியில் உள்ள நீரோடையில் நேற்று (08)இரவு மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா கிரிமிட்டி நகரப்பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்கு செல்வதாக நேற்று இரவு வீட்டில் கூறிவிட்டு சென்றவர் இன்று (09) காலை வரை வீட்டுக்கு வராதமையினால் உறவினர்களும், அப்பகுதி மக்களால் தேடிய நிலையில் குறித்த நபர் நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தீவிர விசாரணை
அதேவேளை குறித்த சம்பவத்தை காவல்துறையினருக்கும் தெரியபடுத்தியுள்ளனர்.
அதனையடுத்து காவல்துறை மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் நானுஓயா கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சித்திரபாலன் மகேஸ்வரன், வயது 49 என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நானுஓயா காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.