கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்
சல்லி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனொன்று கரை ஒதுங்கியுள்ளது.
திருகோணமலை - ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவிலுள்ள சல்லி கடற்கரையில் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை கரை ஒதுங்கியுள்ளது.
இவ் டொல்பின் மீனானது சுமார் 5 அடி நீளம் கொண்ட சிறிய டொல்பின் என தெரியவருகிறது.
விசேட சோதனை
மற்றுமொரு டொல்பின் அதே இடத்தில் உயிருடன் கரையொதுங்கி பின்னர் மீனவர்களால் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது.
[P2HEN ]
இதனையடுத்து குறித்த இடத்திற்கு சேருநுவர வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து இறந்த நிலையில் காணப்பட்ட டொல்பின் மீனை மீட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கை கடலோர காவல்படையினர் இன்று (06) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில், 850 கிலோவுக்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன் இறைச்சியுடன் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சுறா மீன் இறைச்சி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் போன்றன மேலதிக விசாரணைகளுக்காக வெல்லமங்கரயில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |