அமெரிக்காவின் பிடியில் மதுரோ - பதவியேற்ற வெனிசுலாவின் புதிய இடைக்கால ஜனாதிபதி
வெனிசுலாவின் உப ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ், புதிய இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
வெனிசுலா (Venezuela) மீது திடீர் தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்கா, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைச் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியது.
நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்த பின்னர், நியூயோர்க்கிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.
மதுரோ மீது குற்றம்
போதைப்பொருள் பயங்கரவாத சதி, கோகோயின் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி செய்ததாக மதுரோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெனிசுலா தொடர்பில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது சர்வதேச சட்ட விதிகளை மதிக்காமை குறித்து தான் ஆழ்ந்த கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்தும் செயலாளர் நாயகம் குட்டரெஸ் தீவிர அவதானம் செலுத்தியுள்ளார்.
அத்துடன் வெனிசுலாவில் ஜனநாயகம் கடுமையாக பலவீனமடைந்துள்ளதுடன், மில்லியக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால ஜனாதிபதி
இவ்வாறான பின்னணியில், வெனிசுலா இடைக்கால ஜனாதிபதியாக தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy Rodríguez) நியமித்து சில தினங்களுக்கு முன் வெனிசுலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் கராகஸில் இடைக்கால ஜனாதிபதியாக முறையாக பதவியேற்பதை வெனிசுலா அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
Link - https://www.youtube.com/watch?v=r_tXiRfe9e8
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |