“டெல்டா” இந்தியாவை விட இலங்கையில் வீரியம் கூடியது! இலங்கை மருத்துவர் எச்சரிக்கை
India
Corona
Delta
SriLanka
By Chanakyan
இலங்கையின் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, இலங்கையில் 10 மடங்கு அதிகம் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
தனது ருவிட்டர் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், அது இந்தியாவை விடவும் மூன்று மடங்கு அதிகம்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டு வரும் கொரோனா உயிரிழப்புக்கள், இந்தியாவில் கொரோனாபரவல் உச்சத்தில் இருந்த போது ஏற்பட்ட உயிரிழப்புக்களை விடவும் அதிகம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி