வடக்கு கிழக்கில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புக்கள்! வலுப்படுத்தப்படும் புலனாய்வுத் துறை
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புக்கள் பல வடக்கு கிழக்கில் உருவாகியுள்ளன என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் நாடு என்ற ரீதியில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நாட்டின் புலானாய்வு பிரிவு செயலிழந்து காணப்பட்டமையினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது.
ஆகவே தான் தற்போது புலனாய்வுத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
அதாவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் புலனாய்வுத் துறையை பலப்படுத்துவோம் என கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.