சிஐடிக்கு விரைந்த பிரதி அமைச்சர் மகிந்த!
தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க (Mahinda Jayasinghe) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பிரதி அமைச்சர் தொடர்பிலும் அவரது மகள் குறித்தும் சமூக ஊடகங்களில் பரப்ப்படும் அவதூறான தகவல்கள் சம்பந்தமான இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான தவறான பதிவில், பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் தனது மற்றும் அவரது மகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி கொண்டாடியதாகவும் முறைக்கேடாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான அவமானம்
இந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திளத்தில் முறைப்பாடளித்துள்ள பிரதி அமைச்சர், சம்பந்தப்பட்ட பிறந்தநாள் கொண்டாத்த தனது மூத்த மகள் ஏப்ரல் 16, 2023 அன்று கிரியுல்லா பகுதியில் ஏற்பாடு செய்ததாகவும், தனது மகள் களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தனியார் துறையில் பணிபுரிவதாகவும் கூறியுள்ளார்.
இதன்படி, வெளியிடப்பட்டுள்ள குறித்த முறைகேடான தகவல்கள், முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள தனக்கும், தனது அரசியல் பிரச்சாரத்திற்கும் கடுமையான அவமானம் என்று துணை அமைச்சர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இந்தப் பொய்யான தகவல் தனது மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை தீங்கிழைக்கும் வகையிலும் வேண்டுமென்றே அவதூறு பரப்பியுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், தனது முறைப்பாட்டின் மூலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தொடர்புடைய பொய்யான தகவலை உடனடியாக விசாரித்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
