பிள்ளையான் விவகாரத்தில் அநுர அரசின் நோக்கம் இதுதான்..! போட்டுடைத்த எம்.பி
ஈஸ்டர் தாக்குதல்களில் பிள்ளையானை ஒரு சந்தேக நபராக சித்தரிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஒரு கொலை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தாலும், தற்போதைய அரசாங்கம் அதை ரத்து செய்வதாகக் கூறிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்ருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிள்ளையானுக்கான தண்டனை
பிள்ளையான் குற்றவாளி என்றால், அவர் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்படி அல்ல, நாட்டின் சாதாரண சட்டத்தின்படி அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இன்னும் தனது திறமையின்மை மற்றும் தோல்விகளை மறைக்க பழைய பொய்களால் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
