டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகல்
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தனஞ்சய டி சில்வா உடனடியாக விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது.
தேசிய தெரிவுக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில், டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள போதிலும், இலங்கை அணிக்காக வீரராக தொடர்ந்து விளையாடத் தயாராக இருப்பதாக தனஞ்சய டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம்
அவரது தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் எஞ்சிய காலப்பகுதிக்கு அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தனஞ்சய டி சில்வா தொடர்ந்து தேசிய அணிக்கான தெரிவுக்கு கிடைக்கக்கூடியவராக இருப்பதை இலங்கை கிரிக்கெட் வரவேற்றுள்ளது.
டெஸ்ட் அணியின் அடுத்த தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |