மகிந்த மற்றும் நாமலை சந்தித்த ஜெயசங்கர் (படங்கள்)
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (20.01.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் இந்த கலந்துரையாடலில் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டார்
இந்திய ஆதரவு

அதேவேளை இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்கு மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்தார்.
Had successful discussions with India's External Affairs Min. @DrSJaishankar & discussed a range of issues of mutual interest. Also thanked the Indian govt. for it's steadfast commitment in assisting #SriLanka during its troubled times & the strong ties shared between ?? & ?? pic.twitter.com/rQFetrOUNx
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) January 20, 2023
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கையின் பல அரசியல் தரப்புக்களை சந்தித்து தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

