வாக்குச்சீட்டு விநியோகம் : தபால் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்றுடன் (7) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 27ஆம் திகதி முதல் இன்று(07) வரை வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (8) முதல் கடிதங்கள் விநியோகிக்கப்படும் தபால் நிலையத்திற்கு செல்ல முடியும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள்
நாளை தொடக்கம் பொதுத் தேர்தல் நடைபெறும் நவம்பர் 14ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அட்டை விநியோகத்திற்காக தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் தமது பணியை சிறப்பாக மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |