டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள தளம்பல்: இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (14) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபா 71 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 332 ரூபா 36 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபா 47 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 409 ரூபா 41 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 47 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 357 ரூபா 46 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 53 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபா 24 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 41 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 242 ரூபா 24 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 09 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 245 ரூபா 72 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.67 ரூபாயிலிருந்து 321.43 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332.89 ரூபாயிலிருந்து 332.63 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.49 ரூபாயிலிருந்து 320.76 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 331.50 ரூபாயிலிருந்து 331 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 322 ரூபாய் மற்றும் 332 ரூபாயாகவும் மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.