டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (04) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 76 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 327 ரூபாய் 39 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 400 ரூபாய் 89 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 416 ரூபாய் 60 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபாய் 56 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 359 ரூபாய் 69 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 236 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 247 ரூபாய் 31 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 03 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 52 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 237 ரூபாய் 53 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 248 ரூபாய் 11 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.28 ரூபாயிலிருந்து 316.77 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 327.30 ரூபாயிலிருந்து 327.81 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.42 ரூபாயிலிருந்து 316.41 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 325.50 ரூபாயிலிருந்து 326.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 317ரூபாயிலிருந்து 318 ரூபாய் மற்றும் 326 ரூபாயிலிருந்து 327 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |