முன்னணி தேர்தல் வாக்குகளுக்காக போராடுவதில்லை : காண்டீபன்
தமிழ் மக்களின் இருப்பிற்காகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் மாறாக தேர்தல் வாக்குகளுக்காக போராடுவதில்லையெனவும் அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்தார்.
இதனாலேயே தையிட்டியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக ஐ.பி.சி. தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இதன்போது முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்தார்.
திருகோணமலை தாக்குதலின் பின்னணி தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தெய்வாதீனமாகவே உயிர் தப்பியதாகவும், திலீபனின் நினைவூர்தியை பின்வாங்கி இருக்கவில்லை என்றால், அன்று உயிராபத்து இடம்பெற்றிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
சக்கரவியூகம் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தவை காணொளி வடிவில்,