தனக்கு தானே சிலை வைத்து மகிழ்ந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
அமெரிக்க(us) ஜனாதிபதியாக பதவி ஏற்றதிலிருந்து ட்ரம்ப்(donald trump) நாளாந்தம் செய்துவரும் செயல்கள் உலக அரங்கில் பேசு பொருளாக மாறிவருகிறது.
குறிப்பாக உலக நாடுகளுக்கு கட்டுக்கடங்காத வரி விதிப்பு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விலங்கிட்டு சொந்த நாடுகளுக்கு கைதிகள் போல் அனுப்பப்பட்டமை, மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான உதவித் தொகை வெட்டு என ஏராளம் விடயங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன.
துப்பாக்கி சூட்டை நினைவு கூரும் ட்ரம்ப்
அந்த வகையில் தற்போது ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் ட்ரம்பின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயிர் தப்பிய ட்ரம்ப், அந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் இவ்வாறு சிலை வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் இந்த புகைப்படத்தை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
