டக்லஸ் தேவானந்தா சி.ஐ.டியினரால் கைது
முன்னாள் அமைச்சர் உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் இடம்பெற்ற விசாரணையில் அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றிடம் குறித்த ஆயுதம் கையளிக்கப்பட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2001 ஆம் ஆண்டு டக்லஸ் தேவானந்தாவுக்கு இலங்கை இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, பின்னர் 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான 'மாகந்துரே மதுஷ்' என்பவரின் விசாரணையைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயுதத்தின் தொடர் எண்ணைச் சரிபார்த்தபோது, சம்பந்தப்பட்ட துப்பாக்கி தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது.
இந்நிலையில் விசாரணையின் போது, அந்த மூத்த அரசியல்வாதி அது எவ்வாறு காணாமல் போனது என்பதை வெளியிடத் தவறிவிட்டதாகவும், அதன்படி அவர் சிஐடியால் கைது செய்யப்பட்டார் என்றம் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |