யாழில் போதையில் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய சாரதி அதிரடி கைது!
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளான நிலையில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பேருந்து சாரதி போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் இருந்து ஊர்காவற்துறைக்கு நேற்றைய தினம் (30) பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தும், முச்சக்கர வண்டியொன்றும் விபத்துக்குள்ளானது.
ஊர்காவற்துறை காவல்துறையினர்
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் அராலி சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் பின்னால் சென்று பேருந்து மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இரு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை காவல்துறையினர் பேருந்து சாரதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, போதைப்பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பில் பரிசோதனை செய்துள்ளனர்.
குறித்த சாரதி போதைப்பொருள் பாவித்தமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த ஊர்காவற்துறை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |