கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட தாயும் மகனும்..! யாழில் சம்பவம்
கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனையில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குடும்பம் ஒன்றை மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாண சிரேஷ்ட காவல்துறை அத்தியட்கரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நீண்ட காலமாக கசிப்பு பற்றி ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகனும் மற்றும் அயல் வீட்டுக்காரனும் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களிடமிருந்து 15 லீற்ற்ர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட கால செயற்பாடு

நீண்ட காலமாக கோப்பாய் பகுதியில் கசிப்பு மற்றும் போதை பொருளுடன் பலர் யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.