30 வீதத்தால் குறைவடைந்துள்ள மருந்து விற்பனை
Sri Lanka
Drugs
By Beulah
மருந்து விற்பனை சுமார் முப்பது வீதத்தால் குறைந்துள்ளதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“கடுமையான பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள நோயாளிகள் அத்தியாவசிய மருந்துகளை மட்டுமே வாங்க ஆசைப்படுகின்றனர்.
மருத்துவர்களின் சிபாரிசு
அத்துடன், இவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மருந்துகளை மட்டுமே வாங்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும், சில நோயாளிகள் தினமும் உட்கொள்ள வேண்டிய மருந்துகளை உட்கொள்ளகின்றனர்.
குறிப்பாக மருத்துவர்கள் கூறும் சிபாரிசுகளின்படி மருந்து எடுத்துக் கொள்ளாததால் பலர் வீணாக உயிரிழக்கும் சம்பவங்கள் நடப்பதோடு, பொறுப்பான துறையினர் அதை ஆய்வு செய்வதில்லை.” என சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்