முல்லைத்தீவில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம்: ஒருவர் கைது (படங்கள்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரம் செய்து வந்த நபர் ஒருவர் நேற்று (21) காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் குறித்த நபர் 300 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆடைதொழிற்சாலை ஊழியர்களை இலக்கு வைத்து குறித்த சந்தேக நபர் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
திடீர் சுற்றிவளைப்பின் போது
இதேவேளை புதுக்குடியிருப்பு காவல்துறை பொறுப்பதிகாரி M B R கேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவர் தலைமையிலான காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்வதற்காக முயற்சி மேற்கொண்ட போது காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்டு காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் காவல்துறையினர் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு நேசன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
250 ரூபாவிற்கு விற்பனை
இதேவேளை குறித்த நபர் வைத்திருந்த ஒரு போதை மாத்திரையினை 250 ரூபாவிற்கு நகர் பகுதியில் விற்பனை செய்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேக நபர் புதுக்குடியிருப்பு பகுதியில் பல்வேறுபட்ட இடங்களில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற புதுக்குடியிருப்பு காவல்துறையினர் சந்தேக நபரையும் போதை மாத்திரைகளையும் இன்று (22) நீதிமன்றத்தில் முறபடுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |