மன்னார் நகர சபையைக் கைப்பற்றியது சங்கு கூட்டணி

Mannar Selvam Adaikalanathan Local government Election ITAK
By Sathangani Jun 24, 2025 11:04 AM GMT
Report

புதிய இணைப்பு

மன்னார் நகர சபையின் தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் தெரிவாகியுள்ளார்.

மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் மன்னார் நகர சபையில் நடைபெற்றது.

தவிசாளர் தெரிவிற்காக தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.

இதன்போது சபையில் உள்ள 16 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் வருகை தந்திருந்ததுடன் அதிகமானோர் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்த நிலையில் 14 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன் ஒருவர் நடுநிலை வகித்தார்.

தவிசாளர், உப தவிசாளர் தெரிவு

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்கு 06 வாக்குகளும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தனுக்கு 08 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் டானியல் வசந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

உப தவிசாளர் தெரிவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது உசன் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர் சோமநாத் பிரசாத் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.

மன்னார் நகர சபையைக் கைப்பற்றியது சங்கு கூட்டணி | Dtna Form Government In Mannar Pradeshiya Sabha

இதன்போது கூடுதலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்த நிலையில் வாக்களிப்பில் இரண்டு உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.

வாக்களிப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது உசன் 08 வாக்குகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சோமநாத் பிரசாத் 05 வாக்குகளையும் பெற்ற நிலையில் கூடுதல் வாக்குகள் பெற்ற நூர் முகம்மது உசன் மன்னார் நகர சபையின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாந்தை மேற்கு பிரதேச சபை

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச சபையின் (Manthai West Pradeshiya Sabha) தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார் தெரிவாகியுள்ளார்.

தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணி அளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் நடைபெற்றது.

தவிசாளர் தெரிவுக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் செபமாலை கமலச்சந்திரன் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.

இதன் போது சபையில் உள்ள 21 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்தனர்.

உப தவிசாளர் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் செபமாலை கமலச்சந்திரன் 05 வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார் 15 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

மன்னார் நகர சபையைக் கைப்பற்றியது சங்கு கூட்டணி | Dtna Form Government In Mannar Pradeshiya Sabha

இந்த நிலையில் அதி கூடிய வாக்குகளை பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இவருக்கு தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, தொழிலாளர் கட்சி ஆகியவை ஆதரவு வழங்கியது.

மேலும் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்ற போது தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் நிஸாம் நிஜாத் போட்டியின்றி உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

முதலாம் இணைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வசமானது மன்னார் பிரதேச சபை

மன்னார் (Mannar) பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (All Ceylon Makkal Congress) கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் தெரிவாகியுள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24) காலை 8.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவல் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.

ஈரானிடம் கெஞ்சிய ட்ரம்ப் - போர் நிறுத்தம் – ஈரான் அதிகாரபூர்வ அறிவிப்பு

ஈரானிடம் கெஞ்சிய ட்ரம்ப் - போர் நிறுத்தம் – ஈரான் அதிகாரபூர்வ அறிவிப்பு

தவிசாளர் தெரிவு

இதன்போது சபையில் உள்ள 22 உறுப்பினர்களும் பகிரங்க வாக்கெடுப்பை கோரியிருந்ததற்கு அமைய தமிழரசுக் கட்சி உறுப்பினர் கிறிஸ்ரி றெவலுக்கு ஆதரவாக 09 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரானுக்கு ஆதரவாக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மன்னார் நகர சபையைக் கைப்பற்றியது சங்கு கூட்டணி | Dtna Form Government In Mannar Pradeshiya Sabha

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்ற போது உப தவிசாளர் தெரிவிற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.

கட்சிகள் ஆதரவு

பகிரங்க வாக்கெடுப்பு நடந்த நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸிற்கு15 வாக்குகளும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீனுக்கு 07 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் உப தவிசாளராக றொயிட்டன் சாந்தினி குரூஸ் தெரிவு செய்யப்பட்டார்.

மன்னார் நகர சபையைக் கைப்பற்றியது சங்கு கூட்டணி | Dtna Form Government In Mannar Pradeshiya Sabha

இவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சுயேட்சைக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

அநுர அரசின் அதிரடி : ரணிலிடம் விசாரணையை ஆரம்பித்த சிஐடி

அநுர அரசின் அதிரடி : ரணிலிடம் விசாரணையை ஆரம்பித்த சிஐடி

கொழும்பில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பில் உயிரை மாய்த்த பாடசாலை மாணவி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி