நாட்டில் அச்ச நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஊடகத்துறை - முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு
நாட்டிலுள்ள சகல மக்களுமே சட்டத்தின் முன்னர் இப்போது கேட்பாரில்லாமல் உள்ளர். சட்டத்தை மதிப்பவர்களுக்கு முன்னால் தான் நாம் ஒன்றைச் செய்யலாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள ஊடகத்துறையினரும் சரி எழுதப் போகின்றவர்களும் சரி தற்போது மிக மிக அஞ்ச வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் புகைப்படத்துடன் செய்தி ஒன்றினை பிரசுரித்தமைக்கு எதிராக யாழிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றின் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இவ்லவிடயம் தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,