சீனாவில் ஏற்பட்டுள்ள பாரிய நிலநடுக்கம்!
சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் தெலிங்கா நகரில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இன்று ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஆயினும், மக்கள் நெருக்கம் குறைவான பகுதியிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்க மையத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் வரை எந்த கிராமங்களும் இல்லை என தெலிங்கா நகர அவசரகால மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் தெலிங்கா நகரம் மற்றும் ஜியூகுவான், ஜியாயுகுவான் மற்றும் ஜாங்கியே ஆகிய நகரங்களில் உள்ள குடியிருப்புவாசிகளால் உணரப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லையென உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், குறித்த பகுதியில் இயக்கப்படும் பல்வேறு தொடருந்துகள் காலதாமதமுடன் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்