கரூர் சம்பவத்தின் எதிரொலி: ஈழத்தமிழர்கள் எடுக்க வேண்டிய கட்டாய நடவடிக்கை
தமிழ் நாட்டுடன் (Tamil Nadu) இணைந்து பயணிக்க வேண்டிய தேவை தற்பொழுது ஈழத்தமிழர்களுக்கு இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் பிரதமர் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவின் (India) பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் பங்கு என்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.
இந்தநிலையில், அந்த பொருளாதார பலத்தை அரசியல் பலமாக மாற்றி சர்வதேசத்திடம் ஈழத்தமிழர்கள் விவகாரத்தை கொண்டு செல்வதற்கான வாய்ப்பு அங்கு அதிகம் காணப்படுகின்றது.
அதாவது, அண்மையில் தமிழகத்தின் கரூரில் இடம்பெற்ற சம்பவத்திற்கு சீனா (China) இரங்கல் தெரிவித்திருந்தது.
இது இந்தியாவின் மீது மற்றும் தமிழ் நாட்டின் மீது சீனாவின் ஒரு முக்கிய ஈடுபாட்டை பிரதிபலிக்கின்றது.
இந்தநிலையில், தமிழ்நாட்டின் மீதான சர்வதேசத்தின் ஒரு பார்வை இங்கு அதிகமாக காணப்படுவதனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுடன் பயணிப்பது இங்கு ஒரு தேவையாக காணப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேசத்தில் ஈழத்தமிழர்கள் குறித்த பார்வை, ஈழத்தமிழர்கள் எடுக்கவேண்டிய முக்கிய நடவடிக்கை, தமிழர் அரசியல் களம், ஐ.நாவில் ஈழத்தமிழர்களின் முக்கிய தீர்மானம் மற்றும் ஈழதமிழர்களின் விவகாரத்தில் ஐ.நாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்பன தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
