முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்
வெவள்ளத்தில் கோழிகள் அதிக அளவில் இறந்ததால் எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
முட்டைகளின் விலை ஏற்கனவே அதிகரித்துள்ளதாகவும், இது பண்டிகைக் காலத்தில் கேக்குகளின் உற்பத்தியை பாதிக்கக்கூடும் என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
விலங்குகளை வெட்டுவதும் தடை
இதேவேளை, இங்கையில் நிகழ்ந்த பேரனர்த்தம் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கோழிப் பண்ணைகளில் இருந்த சுமார் 15 இலட்சம் கோழிகள் இறந்துள்ளது.

தெதுரு ஓயாவின் கீழ் பகுதியான கோபைகனே பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்த 10 இலட்சம் கோழிகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சேதத்தால் முட்டை உற்பத்தி சுமார் நாற்பது சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக எதிர்வரும் நாட்களில் முட்டை விலை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |