தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல்! எட்டுப்பேர் கைது - அஜித் ரோஹண தகவல்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலில் தீப்பற்றி எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கொள்கலன்களில் இருந்து வௌியேறியுள்ள பொருட்களை சேகரித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி நீர்க்கொழும்பு, பமுனுகமவு மற்றும் துங்கல்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலானது இலங்கையின் தென்கடலாக காலி கடற்பரப்பில் நங்கூரமிட்டு தரித்து நின்ற நிலையில் கடந்த 21ஆம் திகதி தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக நடவடிக்கை மற்கொண்ட ஸ்ரீலங்காகடற்படையினர் குறித்த தீயினை கட்டுப்பாட்டிக் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
பின்னர் கடந்த மூன்று தினத்திற்கு முன்னர் மீண்டும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் குறித்த கப்பலிருந்து பொருட்கள் கடலில் வீழ்ந்துள்ளது.
இதனை யாரும் எடுப்பதற்கு முயற்ச்சிக்க வேண்டாம் என நேற்றையதினம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை சேகரித்த எட்டுப்பரை பொலிஸாரட கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.