ஜனாதிபதி தேர்தல் : வேட்பாளர் சின்னங்களை வெளியிட்டது தேர்தல் ஆணைக்குழு
தேர்தல் ஆணைக்குழு, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கான சின்னங்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்கள் அல்லது கட்சிகளை வாக்குச்சீட்டில் அடையாளம் காண்பதில் சின்னங்கள் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 29 ஆம் திகதி இந்தப் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி கட்சிகள் தமக்கு விருப்பமான சின்னங்களை அறிவிக்க முடியும்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நேற்று (09) நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பானவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தேசிய முறைப்பாடுகள் முகாமைத்துவ நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுக்கு 112 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று வரை பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 269 ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |