சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய திட்டம்! மின்சார கார்களை இறக்குமதி செய்ய அனுமதி
sri lanka
mahinda amaraweera
car
By Shalini
நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் இதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கமும் இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்போது, தனியார் துறை பல்வேறு இடங்களில் சுமார் 400 சார்ஜிங் ஸ்டேசன்களை அமைத்துள்ளது.
அந்த எண்ணிக்கையை மேலும் 350 அல்லது அதற்கு மேற்பட்டதாக அதிகரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.