அதிகாலைவேளை வீட்டிற்குள் புகுந்த யானை : மயிரிழையில் உயிர்தப்பிய வீட்டு உரிமையாளர்
Trincomalee
Elephant
By Independent Writer
Courtesy: Buharys Mohamed







திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை உட்புகுந்த காட்டு யானை வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது.
இதன்போது வீடொன்று பகுதியளவில் சேதமாகியுள்ளதுடன், அங்கிருந்த வீட்டு உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
உயிர்தப்பிய வீட்டு உரிமையாளர்
காட்டு யானையினால் மயிரிழையில் உயிர்தப்பியதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கட்டப்பட்ட வீட்டினை யானை சேதப்படுத்தி உள்ளமையினால் பாதிக்கப்பட்ட வீட்டுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் ,யானை பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறும் வெருகல் -உப்பூறல் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






