அவசரகால சட்டம் குறித்து காவல்துறை வெளியிட்ட தகவல்

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples State of Emergency
By Sathangani Dec 08, 2025 06:41 AM GMT
Report

அவசரகால சட்டம் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதற்காக மட்டுமே நோக்கம் கொண்டது என்றும், இது அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை பேச்சாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் (F. U. Wootler), ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பொது நலன்புரி முயற்சிகள் மற்றும் நடந்து வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்பி அச்சத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பம் : எடுக்கப்பட்டது தீர்மானம்

டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பம் : எடுக்கப்பட்டது தீர்மானம்

ஜனாதிபதி வெளியிட்ட சட்டம்

இந்த சட்டங்கள், பீதியை உண்டாக்க தகவல்தொடர்பு தளங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை மட்டுமே குறிப்பாக இலக்கு வைக்கின்றன" என்றும் அவர் கூறினார்.

அவசரகால சட்டம் குறித்து காவல்துறை வெளியிட்ட தகவல் | Emergency Law To Prevent Spread Of Misinformation

திருத்தப்பட்ட பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40), கீழ் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இந்த அவசரகாலச் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இது அனர்த்த மீட்பு, பொதுப் பாதுகாப்பு மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த தற்காலிக அதிகாரங்களை வழங்குகிறது.

உயர்தர பரீட்சை திகதி - பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சை திகதி - பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

எனினும், இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கவலைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த அவசரகால சட்டங்கள் கருத்து சுதந்திரத்தை அல்லது அரசாங்கத்தின் விமர்சனத்தை ஒடுக்கப் பயன்படுத்தப்படாது என்று உறுதியளித்தார்.

அவசரகால சட்டம் குறித்து காவல்துறை வெளியிட்ட தகவல் | Emergency Law To Prevent Spread Of Misinformation

விமர்சன அல்லது பாதகமான கருத்துக்களால் தாமோ தமது நிர்வாகமோ கலக்கம் அடையவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புதிதாக வெளியிடப்பட்ட அவசரகால சட்டங்களின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என்று அவதானித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL), ஜனாதிபதியிடம் இந்த வாரம் தமது கருத்துக்களை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நாட்டை தாக்கிய டித்வா புயல் : சேத மதிப்பீடு இன்று ஆரம்பம்

நாட்டை தாக்கிய டித்வா புயல் : சேத மதிப்பீடு இன்று ஆரம்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019