ஒளிந்து திரியும் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர்..! கைது செய்ய அதிரடி உத்தரவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று (30) இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரர் இன்று (30) நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமையால் அவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பித்தப்பை அறுவை சிகிச்சை
இதேவேளை, ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பின் மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவர் பித்தப்பை அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் தேவையேற்பட்டால் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தத் தயாராக இருப்பதாக ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். எனினும் ஞானசார தேரருக்கு வசதியான தருணமொன்றில் நீதிமன்றத்தில் முன்னிலையாக அனுமதி தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதனை சட்டமா அதிபர் திணைக்களமும் ஏற்றுக் கொண்டது. அதனையடுத்து ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தகுதியான மருத்துவ நிலையை அடையும் வரை வழக்கை ஒத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |