வெளிநாடுகளில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு : இலங்கையர்களுக்கு அடிக்கப்போகும் அதிஷ்டம்
வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்பு வெற்றிடத்திற்கு இலங்கையர்களை அனுப்ப எதிர்பார்ப்பதாக அநுர அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி தென்கொரியா(south korea),ஜப்பான்(japan) மற்றும் இஸ்ரேலில்(israel)இந்த வேலைவாய்ப்புகள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின்(npp) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான்(Ajith Gihan) தெரிவித்தார்.
கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு
எதிர்காலத்தில் தென் கொரியாவில், இலங்கையர்களுக்கு 7,600 வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஜப்பானில் சுமார் 9,300 வேலை வாய்ப்புகளையும், இஸ்ரேலில் சுமார் 15,900 வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டுமானம், மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சேவைத் துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்