இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
SriLankan Airlines
Sri Lankan Peoples
Israel
By Sathangani
இலங்கையைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் இஸ்ரேலுக்குத் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரக தனியார் நிறுவனத்தின் தலைவர் லால் ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
ப்ளை துபாய் விமானத்தில் ஏற்பட்ட சம்பவம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கன் விமான சேவை
அவர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான கேள்விப்பத்திரம் இன்று கோரப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம், ஒரு மாதத்திற்குள் இவர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |