மோசடி வழக்கில் முக்கிய அமைச்சர்! அநுர அரசாங்கத்திற்கு பேரிடி
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழு (CIABOC) நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ரூ.8 மில்லியன் முறைகேடு செய்ததாக அமைச்சர் மற்றும் இருவர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சாணக்கியனின் கூற்று
இந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமைச்சர் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி என தெரியவருகிறது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பி, உரக் கூட்டுத்தாபனத்தில் நிதி மோசடி தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையில் இருப்பதாக கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

