ஈபிடிபிக்குள் உட்கட்சி மோதல்- படுகாயமடைந்த உதவி செயலர் வைத்தியசாலையில் அனுமதி
hospital
police
vavuniya
epdp
quarrel
By Sumithiran
ஈழமக்கள் ஜனநாயககட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் இன்று இரவு இடம்பெற்ற உட்கட்சிமோதலால் கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் இரவு கட்சியின் உதவிமாவட்டசெயலாளருக்கும் இளைஞரணியினரை சேர்ந்த சிலருக்கும் கூமாங்குளம் பகுதியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உதவி மாவட்டசெயலாளர் காயமடைந்தநிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்