சிஐடியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கம்மன்பில

CID - Sri Lanka Police Dayasiri Jayasekara Udaya Gammanpila
By Sathangani Jun 09, 2025 08:14 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, சிறிது நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”மேற்படி 323 கொள்கலன்களின் பட்டியலைப் பகிரங்கப்படுத்த எதிர்பார்க்கின்றேன்.

சம்பவம் தொடர்பான முடிவுகளை எடுத்த அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இது தொடர்பாக வெளிநாட்டு பயணத் தடையை விதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்.

என்னிடம் உண்மையான சாட்சியங்கள் இருக்கின்றன, ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை ஒருபோதும் கூற மாட்டேன், இந்த விடயத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

முதலாம் இணைப்பு

சற்று முன்னர் சிஐடியில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் கம்மன்பில

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (09) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியதாக குறிப்பிடப்படுகின்றது.

குறுக்கே வர வேண்டாம் - யாழில் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க எச்சரிக்கை

குறுக்கே வர வேண்டாம் - யாழில் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க எச்சரிக்கை

கொள்கலன் விடுவிப்பு விவகாரம்

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் பொய்யான தகவல்களை பரப்பியமைக்காக விரைவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara)  அண்மையில் (04.06.2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சிஐடியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கம்மன்பில | Ex Minister Udaya Gammanpila Appears Before Cid

அதற்கமைய தயாசிறி ஜயசேகர கடந்த 04 மற்றும் 06ஆம் திகதி ஆகிய இரு நாட்கள் 323 கொள்கலன்களை விடுவித்தது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எம்மைத் தூற்றியவர்களுக்கு எம் மீது திடீரெனக் காதல்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

எம்மைத் தூற்றியவர்களுக்கு எம் மீது திடீரெனக் காதல்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

புலிகளை பகடைக்காயாக்கும் எம்.பி அர்ச்சுனா: சரத் வீரசேகர சீற்றம்

புலிகளை பகடைக்காயாக்கும் எம்.பி அர்ச்சுனா: சரத் வீரசேகர சீற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்