அமெரிக்கா - ஈரான் இடையே தவிர்க்க முடியாத இராணுவ மோதல் அபாயம்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு பாரிய இராணுவ மோதல் வெடிப்பது தவிர்க்க முடியாதது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க - அரபு உறவுகளுக்கான தேசிய மன்றத்தின் மூத்த சர்வதேச விவகார ஆய்வாளர் டேவிட் டெஸ் ரோச்சஸ் (David Des Roches) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமான் வளைகுடாவிலுள்ள ஈரானியத் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் கடற்படை முற்றுகை காரணமாக இந்நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானியத் தலைமை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இந்த நிலைமை இப்படியே தொடர்வதில் ட்ரம்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஒரு கட்டத்தில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முற்றுகையை உடைத்து வெளியேறியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு ஈரானியத் தலைமை வரும் என நான் கருதுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கத் தளங்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கு எதிராக ஈரான் தொடர்ந்தும் அச்சுறுத்தலை விடுத்து வரும் நிலையில், பாரிய வான்வழித் தாக்குதல்களை மீண்டும் தொடங்கி இதற்கு ஒரு முடிவைக் கட்ட ட்ரம்ப் தீர்மானிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமான் வளைகுடாப் பகுதிகளில் கடற்படை முற்றுகை நீடித்து வரும் சூழலில் ஈரானின் பதிலடி மற்றும் அமெரிக்காவின் அடுத்தகட்ட இராணுவ நகர்வுகள் குறித்த பதற்றம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |