எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் மீண்டும் வெடிப்பு! உடன் விரைந்த ஸ்ரீலங்கா கடற்படை
மே 21 அன்று கொழும்பு துறைமுகப் பகுதியில் தீப்பிடித்த ஒரு கொள்கலன் கப்பலில் இருந்து 25 பேர் கொண்ட குழு மீட்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று கப்பலில் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து, அதில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக காயமடைந்த இருவர் தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் மே 21 அன்று ஏற்பட்ட தீ விபத்தை மே 22 ஸ்ரீலங்கா கடற்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீலங்கா கடற்படை, துறைமுக ஆணையம் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு மே 21 ஆம் திகதி தீ விபத்து ஏற்பட்ட கொள்கலன் கப்பலின் இருப்பிடத்தை அடைந்து நிலைமையை மேலும் கண்காணித்தனர்.
மேலும் கப்பலில் உள்ள கொள்கலன்களுக்கு மேலே தீப்பிழம்புகளும் காணப்பட்டமையினால் துறைமுக அதிகாரசபையைச் சேர்ந்த மூன்று இழுபறி படகுகள் தற்போது சுற்றுப்புற வெப்பநிலையைக் கட்டுப்படுத்த தீயைச் சுற்றியுள்ள கொள்கலன்களை குளிர்விக்கும் நடவடிக்கையினையும் முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 22 மணி நேரம் முன்
