மாங்குளத்தில் வெடிப்பு சம்பவம்:சிறுவன் உட்பட இருவர் படுகாயம்
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் இன்று இனம்காணப்படாத வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மாங்குளம் நீதிபுரம் பகுதியை சேர்ந்த இருவரும் விறகு எடுப்பதற்காக சென்ற போதே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்
இந்த சம்பவத்தில் மாரிமுத்து மணியம் (84 ) என்ற வயோதிபர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த பார்த்தீபன் நிதர்சன் (06) எனும் சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் .
மேலதிக விசாரணை
மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
