தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்டம்! இரு பெண்கள் உட்பட எழுவர் கைது
Police
Arrest
Ajith Rohana
Rajagiriya
SriLanka
By Chanakyan
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வொன்றில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் இரு பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு ராஜகிரிய பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த நபர்களிடம் இருந்து மதுபானம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்