பேஸ்புக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

srilanka people facebook
By Vasanth Apr 05, 2021 01:48 AM GMT
Report

533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின், தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட பல தரவுகள் கசிந்துள்ளதாக, business insider இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹேக்கிங் தொடர்பான தளம் ஒன்று குறித்த பயனர்களின் தகவல்களை பொது வெளியில் அம்பலப்படுத்தியுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியன் பயனர்களின் தகவல்களே இவ்வாறு கசிய விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்க பயனர்கள் 32 மில்லியனுக்கும் அதிகமானோரினதும், ஐக்கிய இராச்சியத்தின் 11 மில்லியன், இந்திய பயனர்கள் 6 மில்லியன் பேரின் தகவல்கள் இதில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் முழுப் பெயர், பயனர் பெயர், தொலைபேசி இலக்கங்கள், அவர்களது இடங்கள், பிறந்த தினம், அவர்கள் பற்றி சிறு குறிப்பு மற்றும் சிலரின் மின்னஞ்சல் முகவரிகளும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், குறித்த தரவுகளில் சில மாதிரிகளை ஒப்பிட்டு பார்த்தபோது, அதில் பெரும்பாலனவை உண்மையான பேஸ்புக் பயனர்களின் பயனர் பெயர், தொலைபேசி இலக்கங்களுடன் ஒத்துப் போவதாக, businessinsider தளம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டு நிலமையின் போது குறித்த தகவல்கள் கசிந்ததாகவும், அது 2019, ஓகஸ்ட் மாதமளவிலேயே சரி செய்யப்பட்டதாகவும், பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய சைபர் கிரைம் உளவுத்துறை நிறுவனமான Hudson Rock நிறுவனத்தின் இணை நிறுவுனர் அலோன் கல் கருத்துப்படி, குறித்த தரவுகள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஹெக்கர்கள் வட்டாரங்களில் பரவி வருவதாகவும், அவை பேஸ்புக் தரவுகளுடன் ஒத்துப் போவதாக தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவல்களை கசியவிட்டவர்களில் ஒருவரை டெலிகிராம் செயலி மூலம் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்ட்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை என, ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பேஸ்புக் பயனர்கள் எதிர்வரும் மாதங்களில் தங்கள் தொலைபேசி எண்கள் அல்லது ஏனைய தனிப்பட்ட தரவைப் பெற்றுள்ள நபர்களின் சைபர் தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அலன் கல் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி