ஆப்கானில் தலிபான்களுக்கு விழுந்த அடி - மூன்று மாவட்டங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம்
attack
afghanistan
taliban
By Sumithiran
ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான்(Baghlan) மாகாணத்தில் உள்ள போல்-இ-ஹெசார் (Pol-e-Hesar) மாவட்டத்தை தலிபான்களிடம் இருந்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக ஊடகத் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோன்று தேஷ் சலாஹ் (Deh Salah) குவாசான் (Qasaan) ஆகிய மாவட்டங்களையும் தலிபான்களிடம் இருந்து அங்குள்ள எதிர்ப்புக் குழுக்கள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாவட்டங்களை தலிபான்களிடம் இருந்து மீட்க நடந்த போரில் தலிபான்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டாலும், இது குறித்து தலிபான்கள் எந்த தகவலும் வெளியிடவில்லை.
1ம் ஆண்டு நினைவஞ்சலி