வெளிநாடு சென்ற குடும்பபெண் மாயம் : கலக்கத்தில் உறவுகள்
பணிப்பெண்ணாக வெளிநாடு சென்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருடன் எவ்வித தொடர்பும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உறைந்துள்ளனர்.
மட்டக்களப்பு(batticaloa) வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தாயான ஹயாத்து முகம்மது ஐதுறூஸ் நௌபியா (வயது 48) என்பவருடனான தொடர்பே இல்லாமல் போயுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
15 வருடங்களுக்கு முன்னர் சென்றவர்
குறித்த குடும்ப பெண் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் துபாய் (dubai)நாட்டுக்குச் சென்றுள்ளார்.பின்னர் அங்கிருந்து ஓமான் (oman)நாட்டிற்கு சென்று பணிப் பெண்னாக வேலை செய்து வந்த நிலையில் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
பெண்ணை அனுப்பிய முகவர் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலும் இவரை கண்டுகொள்ள பல முயற்சி செய்தும் இதுவரை எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தகவல் தெரிந்தால்
ஓமானில் இருப்பவர்கள் அவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அவரது சகோதரர் சாஜஹான் என்பவரின் 0096565850217 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
