விவசாயிகள் உரமின்றி தவிக்கும் போது எங்கே இருந்தார்கள்...! ரணில் விசனம்
நாட்டு விவசாயிகள் உரமின்றி தவிக்கும் போது சஜித்தும் அநுரவும் எங்கே இருந்தார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கேள்வி எழுப்பினார்.
மக்கள் கஷ்டப்படும் போது ஓடியவர்களே இன்று அவர்களின் எதிர்காலத்திற்காக அதிகாரம் கேட்கின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (11) பிற்பகல் நடைபெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில், தாம் உலகத் தலைவர்களுடன் பேசி உர மானியங்களைப் பெற்றுக்கொடுக்க பாடுபட்டதன் காரணமாகவே விவசாயியை மீண்டும் வயலுக்கு அனுப்பி நாட்டில் அரிசி உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது.
இன்று மக்களின் வாழ்க்கைச் சுமை பற்றிப் பேசும் சஜித்தும் அநுரவும் கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க எவ்வித ஆதரவையும் வழங்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்கள் கஷ்டப்படும் போது ஓடியவர்களே இன்று அவர்களின் எதிர்காலத்திற்காக அதிகாரம் கேட்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள்
உங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் இல்லாத வேளையில் அனைத்து தேவைகளையும் பெற்றுத் தந்தேன்.
உங்களுக்கு எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் போன வேளையில் எதிர்பார்ப்புக்களை மீட்டுத் தந்தேன்.
வேறு எவரும் இந்த பொறுப்பை ஏற்க வராத வேளையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் பொறுப்பை கையளித்தார்.
சஜித்துக்கும் அனுரவிற்கும் மக்களின் கஷ்டங்கள் புரியவில்லை. மக்கள் கஷ்டத்திலிருந்த வேளையில், இந்த நெருக்கடியில் கைவைக்கமாட்டோம் என்று கூறினர்.
விவசாயிகளின் உற்பத்தி
அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்கவுள்ளோம். அடுத்த வருடம் வாழ்கை சுமையை குறைப்பதற்கான வழிகளை செய்வேன்.
அரசாங்கம் விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்யும். கடந்த போகங்களில் மக்களுக்கு பணம் கிடைத்தது.
அடுத்த சிறுபோகத்திலும் நல்ல வருமானம் கிடைக்கும்.
நான் உலக வங்கியுடனும் சமந்தா பவருடனும் பேசியே மக்களுக்கு தேவையான உரத்தை பெற்றுத் தந்தேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |