ஷிராந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற ஆயத்தம்! நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிரடி
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் அடுத்து அவரிடம் காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலிய சவிய நிதியத்துடன் தொடர்புடைய கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக ஷிரந்தி ராஜபக்சவை காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு முன்னதாக அழைத்திருந்தது.
இந்நிலையில், அவர் மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளதால் எதிர்வரும் சில நாட்களில் குறித்த பிரிவில் முன்னிலையாகி தனது வாக்குமூலத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணப் பரிவர்த்தனைகள்
விசாரணையின் போது அவரிடம் குறித்த நிதியத்துடன் தொடர்புடைய கணக்கு, பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், விசாரணை நிறைவடையும் வரை ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக எந்தவொரு குற்றமும் நிரூபிக்கப்பட்டதாகக் கருத முடியாது.

விசாரணையின் பின்னர் காவல்துறையினர் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளே அடுத்தகட்ட நிலைமையை தீர்மானிக்கும்.
ஷிரந்தி ராஜபக்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் தற்போது அனைவரது கவனமும் காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணையை நோக்கியே திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |