உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி; ஊழியர் மரணம்!
உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியானது மிக கோலாகலமாக கத்தாரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த போட்டிகளை நடாத்துகின்ற கத்தாரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் பணியாற்றுகின்றனர்.
இந்தநிலையில் பிபா உலக கிண்ண போட்டிகளில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஊழியரின் இறப்பு
கத்தாரில் உலக கிண்ண போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முதல் பல ஊழியர்கள் மைதான நிர்மாணிப்பு வேலைகளின் போது இறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது, இந்த செய்தி வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தற்போது பிலிப்பீன்ஸைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் இறந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கான பயிற்சிகள் நடைபெறும் இடத்திலே குறித்த ஊழியர் இறந்துள்ளார்.
மரணத்தை உறுதிப்படுத்திய கத்தார்
குறித்த சம்பவத்தை 2022 பீபா(FIFA ) உலகக் கிண்ணக் போட்டிகளின் தலைமை நிர்வாகி நாசிர் அல் காதெர் (Nasser Al Khater) Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரின் குடும்பத்தினருக்கு அவர் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
இதேசமயம், கத்தார் வேலைப் பாதுகாப்பு பிரிவு குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சட்ட நடவடிக்கை
சவுதி அரேபியாவின் கால்பந்து அணி பயிற்சியில் ஈடுபட்ட இடத்தில் விளக்குகள் பொருத்திக் கொண்டிருந்தபோதே குறித்த பிலிப்பீன்ஸ் நபர் உயிரிழந்துள்ளார்.
சரியான பாதுகாப்பு நடைமுறை இல்லாமல் வேலைகளை செய்வித்த குறித்த கத்தார் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கத்தார் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊழியர்களை மோசமாக நடத்துகின்ற குற்றசாட்டுகள் கத்தாரில் தொடர்ந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
