வரி அடையாள இலக்கம் தொடர்பில் நிதி அமைச்சு விளக்கம்
Ranjith Siyambalapitiya
Ministry of Finance Sri Lanka
Value Added Tax (VAT)
By Kathirpriya
வரி பதிவுக்கான வரி அடையாள இலக்கம் வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் போது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வரி அடையாள இலக்கமாக பயன்படுத்துவதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளா்.
இது தொடர்பான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அத்துடன் ஆறு நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுவரை நான்கு நிறுவனங்கள் இது தொடர்பிலான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்