வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Money
By Sathangani May 28, 2026 04:01 AM GMT
Report

சிசிடிவி கமெராக்கள் மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதிப்பது போன்று, போலியான குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பி முன்னெடுக்கப்படும் மோசடி குறித்து காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகள் போலியான தொலைபேசி எண்களிலிருந்து அனுப்பப்படுவதுடன், அவை இலங்கை காவல்துறையினரால் அனுப்பப்பட்டது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க முயற்சி! வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை அகதி

விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க முயற்சி! வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை அகதி

போலி இணையத்தளம்

இந்த செய்திகளைப் பெறுபவர்கள் ஒரு மோசடி இணையதளத்திற்கு வழிநடத்தப்பட்டு, அங்கு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதப் பணத்தை செலுத்துமாறு கோரப்படுகின்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை! | Fines For Traffic Violations Police Warn Drivers

பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில், அதிகாரப்பூர்வ 'GovPay' கட்டண தளத்தை ஒத்ததாக இந்த போலி இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, குறித்த இணையதளத்தை அணுகி பணத்தை செலுத்த முயற்சிப்பவர்களின் கடன் அட்டை விபரங்கள் உள்ளிட்ட இரகசியத் தகவல்கள் மோசடிக்காரர்களால் திருடப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் மேலும் எச்சரித்துள்ளனர்.

அக்கரைப்பற்றில் நீதிபதி இடைநீக்கத்தில் வெடிக்கும் காணி மோசடி சர்ச்சை

அக்கரைப்பற்றில் நீதிபதி இடைநீக்கத்தில் வெடிக்கும் காணி மோசடி சர்ச்சை

போக்குவரத்து அபராதங்கள்

எனவே, எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான செய்திகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் காவல்துறை ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வாகன சாரதிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை! | Fines For Traffic Violations Police Warn Drivers

அத்துடன், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் உத்தியோகபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டு, 'GovPay' அமைப்பின் ஊடாக உத்தியோகபூர்வ அபராதப் பத்திரம் வழங்கப்பட்ட பின்னரே போக்குவரத்து அபராதங்கள் செலுத்தப்பட வேண்டும் என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

இராணுவம் வலுப் பெற வேண்டும்!!- பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்து

இராணுவம் வலுப் பெற வேண்டும்!!- பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026